ஜெர்மனியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 60 வயதிற்கும் கீழ் உள்ள பலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 60 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ஆனால், தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, சிக்கல் இல்லை என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மாநில அமைச்சர்கள் கூறி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சரும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்புக் குழு ஆகியவை அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது என கூறி உள்ளன. ஆனால் ரத்தம் உறைதல் அச்சம் காரணமாக இந்த தடுப்பூசி பயன்பாட்டை பல நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.