இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு – சிங்கப்பூர் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு – சிங்கப்பூர் அறிவிப்பு

இந்தியாவில்  இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள்  தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது.சிங்கப்பூர் சுகாதாரத் துறை  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 22-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பிரத்யேக மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் கூடுதலாக 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பிரத்யேக மையங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பிரத்யேக மையங்களில் 14-ம் நாளில் கொரோனா பரிசோதானையும் பின்னர் வீட்டுத்தனிமை முடியும் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *