நாடாளுமன்றில் இடம்பெற்ற அமளி குறித்து விசாரணை செய்வதற்கான குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 21ம் நாடாளுமன்றில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள ஹரீன் பெர்னாண்டோ மற்றும் திஸ்ஸகுட்டியாரச்சி ஆகியோருக்கு இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் சபாநாயகர் ஏழு பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.இந்தக் குழுவிற்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமை தாங்குவதுடன், அமைச்சர்களான சமல் ராஜபக்ச, கெஹலிய ரம்புக்வெல்ல, ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாபா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.