5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் ஒப்போ

5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் ஒப்போ

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 17,990 விலையில் வெளியிடப்பட்டது.
புதிய ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஒப்போ சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ55 மாடலில் உள்ளதை போன்றே இருக்கிறது.

ஒப்போ ஏ53எஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்- மாலி-G57 MC2 GPU- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்- 128 ஜிபி (UFS 2.1) மெமரி- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி- டூயல் சிம்- கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்- 2 எம்பி டெப்த் கேமரா- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0- பக்கவாட்டில் கைரேகை சென்சார்- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1- யுஎஸ்பி டைப் சி- 5000 எம்ஏஹெச் பேட்டரி 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *