நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.முன்னதாக ஆப்பிள், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்குதை நிறுத்தின. இவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்து வந்தன.
நோக்கியா எக்ஸ்20 மாடலுக்கான வலைப்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் வால் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் பெட்டி 100 சதவீதம் உரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்-பாக்சில் வழங்கப்படும் சாதனங்கள் பட்டியலில் வால் சார்ஜர் இடம்பெறவில்லை. ஹெச்எம்டி குளோபல் இந்த ஸ்மார்ட்போனை ஏப்ரல் 8 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.