கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக தீர்மானம்!

கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக தீர்மானம்!

வவுனியாவில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், தொடர்பான விசேடகலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கொவிட் 19 தாக்கம் தொடர்பில் வவுனியாவின் தற்போதைய நிலை, மற்றும் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள், புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உரிய திணைக்களங்கள் இறுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலில் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் கொவிட் தடுப்பு செயலணியின் இணைப்பாளர் மேயர் ஜெனரல் மகேஸ்பண்டார, பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்தின, சுகாதாரவைத்திய அதிகாரிகள், பொலிஸார், வர்த்தகர்சங்கம், போக்குவரத்துதரப்பினர், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *