அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்.

இல்கையின் மூன்று மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்கள் அதி அவதானம் மிக்க மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.குறித்த மாவட்டங்களில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பிரதேசங்களை போன்று இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் கொவிட் கொத்தணிகள் உருவாகி தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்த வார இறுதி நாட்களில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறு நாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஓரளவேனும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என நாம் எதிர்ப்பார்த்தோம்.எனினும் இதுவரை அவ்வாறான எந்த ஒரு நடவடிக்கையும் காணக்கூடியதாக இல்லை. இந்த சூழ்நிலையில், உயிர்களையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு 100 சதவீதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரமலான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம் மக்களுக்காக சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நிலவும் அசாதாரண நிலைமையினை கருத்திற்கொண்டு மதத்தலைவர்கள் மற்றும் பக்தர்கள் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *