இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரியும் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.பதாதைகளை காட்சியப்படுத்தியவாறு விசேட வழிபாட்டில் இன்றைய தினம் ஈடுபட்டுள்ளனர். ஹட்டன் பிரதேசத்தில் ஆசிரியர் குடும்பம் உட்பட பலரும் இந்த குண்டு தாக்குதலில் உயிரிழந்தனர்.
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் அருட்தந்தை தலைமையில் இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர். அத்துடன் அவர்களின் குடும்பஸ்தர்களும் இந்த வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.இதில் ஹட்டன் வாழ் பகுதி கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2019ஆம் வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 277 பேர் உயிரிழந்துள்ளனர். 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.