பிராந்தியத்தில் கொவிட் தொற்றுக்கள் அதிகரித்ததை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொற்றுநோய் தொடர்பான ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் பிற ஆதரவு குறித்து இன்று உரையாடலை ஆரம்பிக்கவுள்ளார்.
இது தொடர்பிலான மெய்நிகர் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும். இதன்போது இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை முன்வைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.கொவிட் பரவல் தீவிரமாகியுள்ள நிலையில் மனித உயிர்கள் மற்றும் பொருளாதாரத்தில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சீனாவிடமிருந்து மேலும் மேலும் முதலீடுகளை இலங்கை எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.