நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மற்றுமொரு அமைச்சரான அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்து வருவதை அடுத்து தென்பகுதியிலும் கிழக்கில் திருகோணமலையிலும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அத்துடன் வைத்தியசாலைகளிலும் கொவிட் நோயாளிகள் பெருமளவில் அனுமதிக்கப்படுவதால் வைத்தியசாலைகளும் பெரும் நெருக்கடியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.