துருக்கியில் 47 லட்சத்தை தாண்டியது கொரோனா  பாதிப்பு

துருக்கியில் 47 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனைத்தொடர்ந்து துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் 2-வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 43,301 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47,10,582 ஆக உயர்ந்துள்ளது.மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக 346 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 39,057 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவில் இருந்து இதுவரை 41.67 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 5.04 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *