இந்திய பயணிகளுக்கு வரும் வியாழக்கிழமையில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகள், பிலிப்பைன்சில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மற்றும் கடந்த 14 நாட்களாக இந்தியாவில் இருந்து வந்த பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த தடை வரும் மே 14 வரை கடைப்பிடிக்கப்படும்” என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பிலிப்பைன்சில் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 204 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கி உள்ளது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்றுகண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் போல கம்போடியா நாட்டிலும் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய பயணிகள் மற்றும் இந்தியா வழியாக வரும் வேறு நாட்டு பயணிகளுக்கும் கம்போடியாவில் நுழைய மறு அறிவிப்பு வரும்வரை தடை விதிக்கப்படுகிறது. கடந்த 3 வாரங்களில் இந்தியா சென்று திரும்பிய எந்த பயணியும் கம்போடியாவில் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.