நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகாவின் குற்றம்சாட்டடு.

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகாவின் குற்றம்சாட்டடு.

குறிப்பிட்ட சில வியாபாரிகளின் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுகிறதேயன்றி மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்படுவதாக இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,இன்று நாட்டு மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக பல சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். நாளாந்த நுகர்வுத் தேவைகளுக்கு ஏற்றால் போல் நாளாந்த வருமானங்கள் இல்லாமையும் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை என்பவற்றால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

குறிப்பிட்ட சில வியாபாரிகளின் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுகிறதேயன்றி மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்படுவதாக இல்லை. சீனி மோசடியை ஏற்படுத்தியவர்களே தேங்காய் எண்ணெய் மோசடியையும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது. இதையும் தாண்டி மக்களை சூட்சுமமாக ஏமாற்றும் புதிய மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்.அண்மையில் ஏற்படுத்தப்பட்ட உயிர்வாயு விலைக் குறைப்பு பாரிய ஏமாற்றும் வித்தையாகும். உயிர்வாயு 12.5 கிலோ எடை கொண்ட கொள்ளளவிலிருந்து 3 கிலோ எடையைக் குறைத்து விட்டு 100 ரூபா விலைக் குறைப்பாக காட்டியுள்ளனர். உண்மையில் எடை குறைப்பால் 400/500 ரூபாவை மக்கள் மேலதிகமாக செலுத்துகின்றனர்.

அரசாங்கத்தோடு இருக்கும் சில வியாபார நண்பர்கள் குழுவே இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளன. கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் நாட்டின் நலனிற்கு பாதிப்பாக அமைந்துள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட பூமிப் பரப்பை தனி சீனாவின் ஆதிக்கத்திற்குட்பட்ட பிரதேசமாக மாற்றும் இந்த ஆணைக்குழுச் சட்டம் என்பதாலேயே இதை எதிர்க்கிறோம்.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு கொழும்புத் துறைமுக நகரம் மிக முக்கிய மூலோபாய இடமாகும். எனவே இதை சீனாவின் ஆதிக்கத்திற்கு சீனாவின் தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்ட வெளிப்படை தன்மையற்ற பொறுப்புக் கூறாத சட்ட மூலத்தை எதிர்க்கிறோம். கொழும்பு மாநகர சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சட்டம், நாடாளுமன்ற கணக்காய்விற்குட்படாத தன்மை, பொறுப்புக் கூறாத தன்மை என்பவற்றால் இதில் பாரிய சிக்கல் தன்மையுள்ளது.மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக அரசாங்கம் செயற்பட வேண்டும். இவ்வாறு துறைமுக நகர திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இதன் மூலமான வர்த்தக பொருளாதார நலனும் பிராந்திய நலனும் வெளிச் சக்திகளுக்கே செல்லும்.

இதேவேளை, கொரோனா மூன்றாம் அலை ஏற்ப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் முகாமை செய்ய முடியாமையின் விளைவுகளை படிப்பினையாகக் கொண்டு இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும். கொவிட் பரவல் மற்றும் சிகிச்சையளிப்பு முகாமை விடயங்களில் சுகாதாரத் துறை பலவீனப்டட்டுள்ளதாக சுகாதார நிர்வாக அதிகாரிகளே கூறுகின்றனர்.

அரசாங்கம் தான் கைவிட்டுள்ளது. தடுப்பூசிளை கொள்வனவு செய்வதற்கு இவ்வளவு காலமும் நிதி ஒதுக்காது தற்போது தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று ஜனாதிபதி கூறுகிறார்.நான் கடந்த ஆண்டே தடுப்பூசி கொள்வனவு பற்றி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டேன். குறிப்பிட்ட போது வாசுதேவும் நாமலும் கிண்டலடித்தனர். இன்று அவை உண்மையாகியுள்ளது.அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும்ம் கண்டுபிடிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது.

பலவீனமான ஆட்சியாக அமைகிறது. ஈஸ்டர் தாக்குதலை வைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போதும் தமது அதிகார இருப்பை பாதுகாக்க இதை பயன்படுத்துவது துரதிஷ்டமாகும். இதில் அரசியல் இலாபங்கள் தேடாமல் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *