ஸ்ரீலங்காவை அடிமைப்படுத்தும் திட்டமா? வெளிவந்தது அறிவிப்பு

ஸ்ரீலங்காவை அடிமைப்படுத்தும் திட்டமா? வெளிவந்தது அறிவிப்பு

சீனா, ஸ்ரீலங்காவுக்கு உதவிகளை வழங்கினாலும் ஸ்ரீலங்கா மக்கள் கண்களை மூடிக்கொண்டுள்ளனர். சர்வதேச வர்த்தக விதிமுறைக்களுக்க ஏற்ப சீனாவினால் ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்பட்ட கடன்களை அவர்கள் சூழ்ச்சியாக பார்க்கின்றனர். நீண்ட காலமாக சில இலங்கையர்கள் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர். எந்த ஒரு ஒப்பந்தமும் இன்றி சீனா இலங்கையில் முதலீடு செய்வதனை நாட்டினை அடிமைப்படுத்தும் செயற்பாடாக பார்க்கின்றனர்.இவ்வாறு கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் சீனா வெளியிட்ட சிங்களமொழியிலான விவரணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு துறைமுக நகர அதிகார சபை சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் கொழும்பு துறைமுக நகர் திட்டம் இலங்கையில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.சீன கொமினிக்கேசன் கொன்றக்ஸன் நிறுவனமும், இலங்கை துறைமுக அதிகார சபையும் இணைந்து கொழும்பு துறைமுக நகரை அபிவிருத்தி செய்துள்ளன. ஒன்று தசம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கான நேரடி முதலீடாகும். இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவுபெற்றதன் பின்னர் 13 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர் திட்டதினூடாக 83 ஆயிரம் வேலைவாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. கொழும்பு துறைமுக நகர அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் பலவித கருத்துக்கள் காணப்படுகின்றன.எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அந்த சட்டமூலத்தினூடாக துறைமுகநரின் அபிவிருத்தி திட்டத்தின் பங்குகளின் 100 வீத உரிமம் இலங்கைக்கே உள்ளது. கொழும்பு துறைமுக நகர அதிகார சபை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் என்பது எமது எதிர்பார்ப்பு என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *