78 லட்சம் பிஎஸ்5 யூனிட்களை விற்ற சோனி

78 லட்சம் பிஎஸ்5 யூனிட்களை விற்ற சோனி

சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் 14.9 சதவீதம் வருடாந்திர லாபம் ஈட்டியுள்ளது. மார்ச் 31, 2021 வரையிலான காலாண்டில் மட்டும் சோனி 26.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.இந்த நிறுவனத்தின் சமீபத்திய பிளேஸ்டேஷன் 5 உலகம் முழுக்க சுமார் 78 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் சுமார் 45 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 33 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த வியாபாரத்தில் கேம் மற்றும் நெட்வொர்க் சேவைகள் பிரிவில் மட்டும் சோனி கணிசமான லாபம் ஈட்டியுள்ளது. இதன் மின்னணு பொருட்கள் பிரிவு 3 சதவீத சரிவடைந்துள்ளது. டிஜிட்டல் கேமரா, ஒளிபரப்பு, தொழில்முறை ஆடியோ மற்றும் வீடியோ சாதனங்கள் விற்பனையும் சரிவடைந்து இருக்கிறது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *