நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வு நடைபெறுமா?

நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வு நடைபெறுமா?

கோவிட் நிலைமையை அனுசரித்தே தேசிய வெசாக் உற்சவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை யாழ். நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் நேற்று தேசிய வெசாக் உற்சவ முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவின் தலைமையில் யாழ். மாவட்ட அரச அதிபரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தில் தேசிய வெசாக் நிகழ்வுக்கென தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.கோவிட் தொற்று நிலைமைக்கு ஏற்றவாறு அனுசரித்து அதற்கேற்ப தேசிய வெசாக் நிகழ்வை நடத்துவது எனவும், நிகழ்வில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை அதற்கேற்ப மட்டுப்படுத்துவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.தற்போது அதிகரித்து வரும் கோவிட் தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மிக அமைதியான முறையில் தேசிய வெசாக் நிகழ்வைக் கொண்டாட தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

இந்த முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, முப்படைகளின் பிரதிநிதிகள், புத்தசாசன அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், வேலணை பிரதேச செயலர் மற்றும் மதகுருக்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *