எதிரக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்க குற்றச்சாட்டு.

எதிரக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்க குற்றச்சாட்டு.

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதித்து அவர்களின் உரிமைகளை முடக்கி உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது.இவ்வாறான சூழலை மாற்றியமைக்கக் கூடிய பலம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே காணப்படுகிறது என்று எதிரக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் முகப்புத்தக நேரலையூடாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,தொழிலாளர்களின் கரங்களால் ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக , அவர்களிடமிருந்து அதனைப் பறித்து முதலாளிமாருக்கே வழங்கியுள்ளனர்.வரி நிவாரணம் ஊடாக முதலாளி வர்க்கத்தினருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சலுகைகளினால் நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே தொழிலாளர்களுக்கு திருப்தியடைக் கூடிய வாழ்வாதாரம் கிடைக்கப் பெறாமலுள்ளது.அரச அதிகாரம் கிடைத்தவுடன் தொழிலாளர்களை ஆட்சியாளர்களாக்குவதாக கூறினார்கள். ஆனால் தற்போது தடை விதித்து , தொழிலாளர்களின் உரிமையை முடக்கி அவர்களை புறந்தள்ளி, நாட்டில் உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *