உயிரியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி கயலினி.

உயிரியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி கயலினி.

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் முதல் நிலை பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார். கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் கயலினி என்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவியே இரண்டு ஏ, பி பெறுபேறுகளை பெற்று உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.குறித்த மாணவி பரீட்சை எழுதிவிட்டு தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைக்க கிளிநொச்சி, அறிவியல் நகரில் இயங்கி வருகின்ற ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார்.

தந்தை கூலித் தொழில், தாய் வீட்டுப் பணி செய்பவர். எனவே தான் 2020 உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு குடும்ப பொருளாதாரத்தை தனியே சுமந்து நிற்கும் தந்தைக்கு தோள் கொடுக்க ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்றுள்ளதாக தனது அனுபவத்தினை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *