பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின் மாநிலத்தில் உள்ள ஜாகரேசின்ஹோ நகரத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 25 பேர் இறந்ததாக ஓ குளோபோ செய்தித்தாள் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மெட்ரோ ரெயிலில் இருந்த இரண்டு பயணிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ரியோவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளாகும்.
கடந்த 2007-ம் ஆண்டில் காம்ப்ளெக்ஸோ டூ அலெமியோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 19-ஐத் தாண்டியது, தவிர இந்த சம்பவத்தில் எங்களில் ஒருவரை கூட நாங்கள் இழக்கவில்லை என்று காவல்துறை அதிகாரி ரொனால்டோ ஒலிவேரா தெரிவித்தார்.ஜாகரேசின்ஹோவில் இறந்தவர்களில் ஆதிக்கம் செலுத்திய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்களும் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை மாநிலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.