துருக்கி நாட்டில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.

துருக்கி நாட்டில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் துருக்கி தற்போது 5-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்து 77 ஆயிரத்து 982 ஆக உள்ளது.

ஒரே நாளில் 304 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 187 ஆக உயர்ந்துள்ளது.மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 46.26 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 3.08 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *