எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான இந்தோனோஷித் தூதுவர் குஸ்தி நுஹ்ரா அர்த்தியசாவுக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.இச்சந்திப்பானது இன்று கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.குறிப்பாக கொரோனாவால் பெரிதும் பதிக்கப்பட்ட இந்தோனோஷிய அதன் மீளுகைக்கு கையாளும் தடுப்பூசி கையாள்கை குறித்த விடயங்களை தூதுவர் எதிர்க் கட்சித் தலைவரிடம் சுட்டிக்காட்டினார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கையின் தற்போதைய நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இந்தோனோஷியத் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.மரபு ரீதியாக இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடி இவர்கள் பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார உறவுகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற விடயம் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.