நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவலை அடிப்படையாக கொண்டு கடும் பயண தடைகளை உடனடியாக விதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் காலத்தில் மாபெரும் தேசிய அனர்த்தம் ஏற்படும் என இலங்கையில் உள்ள பிரதான மருத்துவ சங்கங்கள் இணைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலைமையில் அடுத்த சில வாரங்களில் மற்றும் அதற்கு பின்னரும் கொரோனா மரணங்கள் பெருமளவில் அதிகரிக்கலாம் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த தவறினால், அதற்கான செலவுகளும் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் எனவும் மருத்துவ சங்கங்கள் கூறியுள்ளன.இலங்கை வைத்திய சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம், இலங்கை வைத்திய சங்கத்தின் அனைத்து கல்லூரிகள் குழு ஆகியன இணைந்து இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன.