அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். எனினும் துப்பாக்கி சூடு சம்பங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில், பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மிகவும் கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பலர் ஒரு வீட்டில் திரண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 6 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் காதலன் இந்த தாக்குதலை நடத்தியதுடன், தானும் தற்கொலை செயதிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.