எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் மாலை இந்த விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொரோனா பரவல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தமான சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வைகையில் பொறுப்புடன் செயற்படும் விதம் குறித்து வைத்திய அதிகாரிகள் சங்கததினர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளை சந்தித்த போது நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு தான் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காருட் கலந்துக்கொண்டுள்ளார்.இதன்போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய, சங்கத்தின் ஏனைய பிரதிநிதிகளான மருத்துவர்கள் ஹரித அளுத்கே, நளிந்த ஹேரத், சந்திக எப்பிடகொட, ஷேனால் பெர்னாண்டோ, சமந்த ஆனந்த, எச்.என். டி. சொய்நா ஆகியோர் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.