முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை!

முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை!

முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009 ஆண்டு எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ, அதேபோன்று மே மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைப் பிரதேசத்தில் குருந்தூர் மலையில் தமிழர்களின் மத கலாசார அடையாளம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைப் பிரதேசத்தில் குருந்தூர் மலையில் தமிழர்களின் மத கலாசாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் பிரதிபலித்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கையகப்படுத்தி, நேற்றைய தினம் எந்தவிதமான ஐனநாயக, சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாது பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு புத்தர் சிலை வைத்து பௌத்த பிக்குகளினால் பிரித் ஓதல் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது மீண்டும் ஒரு கலாசார படுகொலையை முல்லை மண்ணில் அரங்கேற்றியுள்ளது. தொல்லியல் திணைக்களம் ஏற்கனவே குருந்தூர் மலையில் மேற்கொண்ட ஆய்வில் இறுதியில் கண்டெடுக்கப்பட்டது சிவலிங்க வடிவிலான தொல் பொருள் என்பது உலகமே அறிந்த விடையம். அத்துடன் குருந்தமரம் என்பது இந்துக்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. இதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

இவ்வாறான ஒரு கலாசாரப் பகுதி திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றது. இதுவும் தமிழர்களின் கலாசாரத்தை இராணுவப் பிடிக்குள் வைத்து மேற்கொள்ளப்படும் படுகொலையாகவே அமைந்துள்ளது. கொரோன பெரும் தொற்று என பிரகடனப்படுத்தி இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மக்களை கோரும் அரச இயந்திரம் தாங்களே, அப்பட்டமாக மீறுகின்ற மிக அவலமான நிலை குருந்தூர் மலையில் இடம் பெற்றுள்ளது. சட்டம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் எதேச்சதிகாரம் மேலோங்கி உள்ளதையே இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *