கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பிரதமர் மகிந்த ராஜபக்சவே உள்ளார் என்ற சந்தேகத்தை சமுக ஊடக ஆர்வலர்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இதன்படி மகிந்தவின் வேண்டுகோளின்பேரிலேயே ரணில் குறித் அறிக்கையை விடுத்ததாகவும் அந்த ஊடகம் சமுக ஊடக ஆர்வலர்களை மேற்காள்காட்டி தெரிவித்துள்ளது.
அமைச்சரவையை முற்றிலுமாக புறக்கணித்து, ஜனாதிபதி தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் நாட்டை ஆள்கிறார் என்ற அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடையே கவலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் இத்தகைய நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பில் தனது பெயரை வெளியிடவேண்டாமெனத் தெரிவித்து குறித்த ஊடகத்திடம் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் வெளியிட்ட தகவலில், ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் பாரிய இடைவெளி உள்ளதாக குறிப்பிட்டார்.அத்துடன் ஜனாதிபதி, இராணுவத்தளபதிக்கும் மற்றும் பல தொழிலதிபர்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்.
அத்துடன் தற்போது ஜனாதிபியின் செயலாளர் கூட பிரதமரின் தொலைபேசி அழைப்புக்கு கூட பதிலளிப்பதில்லை.ஜனாதிபதி எங்களை பயன்படுத்துவதே இல்லை.மகிந்தானந்தா கூட அவர் சொல்வதை கேட்பதில்லை. எனினும் எங்களை பொருட்படுத்தாமல் தற்போது வளர்ந்தவர் சஜித்தான் எனத் தெரிவித்தார்.இவ்வாறு அரசுக்குள் உள்ளக நெருக்கடிகள் உள்ள நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி “தேவையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படாவிட்டால், பல உயிர்கள் பறிபோகும் ஒரு கடுமையான சூழல் உருவாகியுள்ளது. இப்போது செயற்படாவிட்டால் பல உயிர்களை இழக்க நேரிடும். இந்த அதிகாரங்களை பொறுப்பேற்குமாறு அமைச்சரவையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஜனாதிபதியும் அமைச்சரவையும் உடனடியாக இந்த அதிகாரங்களை பொறுப்பேற்க வேண்டும்.
” நாட்டு மக்கள் மீது அனுதாபம் இருந்தால், அமைச்சரவை இந்த பொறுப்பை ஏற்க வேண்டும். அனுபவமுள்ளவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதன்படி செயல்பட நான் ஒரு சிறப்பு கோரிக்கையை விடுக்கிறேன். இது அரசாங்கத்தின் பெயரைக் காப்பாற்றும் போராட்டம் அல்ல. மேலும், இது ஒரு அரசியல் யுத்தம் அல்ல. உண்மையில், இது மக்களின் உயிரைக் காப்பாற்றும் போராட்டம். அரசாங்க மாற்றத்தை நாங்கள் கேட்கவில்லை.
இந்த நாட்டின் அரசியலமைப்பின் படி, நாட்டின் பொறுப்பு அமைச்சரவையிடம் உள்ளது. இந்த தொற்றுநோயிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்க ஜனாதிபதி, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை முழு அதிகாரங்களையும் பொறுப்பேற்க வேண்டும்.கொவிட் நிர்வாகத்தின் கீழ் உள்ள குழுக்கள் தோல்வியடைந்துள்ளன. இதன் தீவிரத்தன்மை குறித்து எதுவும் கூறப்படவில்லை. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என முன்னாள் பிரதமர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.