நேபாள பிரதமராக மீண்டும் கே.பி.சா்மா.

நேபாள பிரதமராக மீண்டும் கே.பி.சா்மா.

நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் அதிகரித்தது. பார்லி.,யை கலைக்கும்படி, பிரதமர் ஒலி பரிந்துரைத்தார். இதை, அதிபர் பித்யா தேவி பண்டாரி ஏற்றார். பிரதமரின் முடிவுக்கு நேபாள உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அரசியல் குழப்பம் அதிகரித்த நிலையில், அதிபரின் உத்தரவின்படி, பார்லிமென்டில் கடந்த 10-ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் ஒலி அரசு தோல்வி அடைந்தது.இதன்பின், அதிபர் பித்ய தேவி பண்டாரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சி அமைக்க தகுதி உள்ள கட்சிகள் 13ம் தேதிக்குள் அதிபரை சந்தித்து உரிமை கோர வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நேபாளத்தில் புதிய ஆட்சி அமைக்க எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நேபாள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் ஆட்சி அமைக்க அதிபரிடம் உரிமை கோர முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க தவறிவிட்டதால், கே.பி.சா்மா ஒலியையே மீண்டும் பிரதமராக அந்நாட்டு அதிபா் வித்யாதேவி பண்டாரி நேற்று இரவு நியமித்தார். பிரதமராக கே.பி. சா்மா ஒலி இன்று பதவியேற்க உள்ளார்.எனினும், அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற 30 நாள்களுக்குள் கே.பி. சா்மா ஒலி பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.

முன்னதாக, நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவா் புஷ்பகமல் தாஹால் (பிரசண்டா) அரசு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால், பாராளுமன்றத்தில் சா்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி பெரும்பான்மை இழந்தது. பிரதமா் பதவியிலிருந்து சா்மா ஒலி விடுவிக்கப்பட்டார்.இதையடுத்து, புதிய அரசை அமைப்பதற்கு எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு வியாழக்கிழமை இரவு 9 மணி வரை அந்நாட்டு அதிபா் வித்யாதேவி பண்டாரி வாய்ப்பு அளித்திருந்தார்.

நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ பஹதூா் தேபா ஆட்சி அமைக்கப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார். அவருக்கு நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவா் பிரசண்டாவும் ஆதரவு அளித்தார். ஆனால், நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க நேபாள ஜனதா சமாஜாவாதி கட்சி ஆதரவு அளிக்காததால் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

நேபாள காங்கிரஸ் கட்சிக்கு, சி.பி.என்.எம்.சி., எனப்படும், நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும், நேபாள ஜனதா சமாஜ்வாதி கட்சியும் ஆதரவு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 271 உறுப்பினர்கள் அடங்கிய நேபாள பார்லிமென்டில் நேபாள காங்கிரசுக்கு, 61 உறுப்பினர்கள் உள்ளனர். சி.பி.என்.எம்.சி.,க்கு, 49 உறுப்பினர்களும் நேபாள ஜனதா சமாஜ்வாதிக்கு 32 உறுப்பினர்களும் உள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *