இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது.சிங்கப்பூரில் புதிதாக 38 பேருக்கு உள்ளூர் மக்கள் மூலம் தொற்று பரவியிருக்கிறது. இதையொட்டி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சமூகப் பரவல் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இந்தியாவில் உருவானதாக கூறப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், சிங்கபூரில் பரவ தொடங்கியுள்ளதால், அனைத்து பள்ளிகளையும் மூட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.