தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் கோட்டாபய அரசாங்கம்-பாட்டலி சம்பிக்க ரணவக்க

தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் கோட்டாபய அரசாங்கம்-பாட்டலி சம்பிக்க ரணவக்க

வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு நேற்றைய தினம் பொரளையில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்,

எமது நாடு துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்ற இக்காலகட்டத்தில், வெளிநாட்டவர்களுக்கு இந்நாட்டில் ஈழ அரசு உருவாவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளது. “கொவிட் 19 அச்சுறுத்தலினால் நாடு முடக்கப்படவேண்டிய சூழலில், நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, நாட்டின் ஒற்றுமைக்கு துரோகம் இழைத்துவிட்டு வெளிநாட்டு அரசு ஒன்றை உருவாக்குவதற்கான சட்டத்தை இயற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் அடுத்த மூன்று நாட்களும் செயற்படவுள்ளது.

தனித்தனியாக சட்டம் இயற்றிக்கொண்டு, தனியான வரியை வசூலித்துக்கொண்டு, தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து வருகிறது. ” “நாங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்கள், அதைப்போலவே, வெளிநாட்டவர்களின் ஈழம் ஒன்று தோன்றுவதற்கும் நாங்கள் எதிரானவர்கள். நமது நாடு எதிர்காலத்தில் போருக்கான மத்திய நிலையமாக மாற்றமாகலாம். உலக சக்திகளிடம் அகப்பட்டு பாரிய அழிவை சந்திக்க நேரிடலாம்.

உலக வல்லரசுகளின் பிரச்சினைகளுக்கு இலங்கை தலையிடும் வகையிலும், வெளிநாட்டு விமான செயற்பாடுகளுக்கு, வெளிநாட்டு கடற்படை விவகாரங்களுக்கு, வெளிநாட்டு பணம் இலங்கையில் வைப்பிலிடச் செய்யவும், வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான காலனித்துவமாக துறைமுக நகரை நாட்டில் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *