தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ள தி பேமிலி மேன்-2 வெப்சீரியல்.குறித்த சீரியலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதியின்திரைப்படம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே எதிர்ப்பு கிளம்பியதால் அதனை கைவிடுவதற்கு அவருக்கு இலகுவாக இருந்தது அதேநேரம் அவர் ஒரு யதார்த்த வாதி எவரின் மனதையும் வேதனைப்படுத்தாமல் தனது கருத்துக்களை முன் வைப்பவரும் கூட இதே பக்குவம் பக்குவம் தி பேமிலி மேன்-2 வெப்சீரியலில் பங்கேற்கும் நடிகர்களுக்கு இருக்குமா என்பது கேள்விக்குரியதே அதேநேரம் குறித்த சீரியல் இணைய வாயிலாக வெளிவரவுள்ளதால் கடும் சவால்கள் இரு சாராருக்கும் உள்ளது என்பதே உண்மை இருப்பினும் சில தினங்களில் முடிவு தெரிந்துவிடும்
தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ளதி பேமிலி மேன்-2 வெப்சீரியல் தயாரித்து வெளியிடும் அமேஷான் பிரேம் நிறுவனத்தைதமிழர் நலப் பேரியக்கத்தின் சார்ப்பில் எச்சரிக்கை செய்கிறோம்.தமிழீழ மண்ணின் விடுதலைக்குப் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பை இழிவு செய்து ,தி பேமிலி மேன் 2 என்கிற வெப் சீரியல் ஜூன் நான்கில் அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது. இந்தத்தொடரின் இயக்குநரும், தயாரிப்பாளர்கள் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி. கே.ஆகியோர் ராஜபக்சேவின் பினாமிகள். ஆகவே திட்டமிட்டே விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத அமைப்பு என்று நிறுவ முயலுகிறார்கள். இதற்கு முன் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே பெரும் தொகை கொடுத்து இந்த திரைப்பட நாயகன் மலையாளி ஜான் ஆப்ரஹாம் மூலமாக “மெட்ராஸ் கபே” என்று ஒரு படமெடுத்து புலிகளையும் அதன் தலைமையையும் இழிவு செய்தான்.
அதை அறிந்து தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது.மும்பை உயர்நீதி மன்றத்தில் எமது “தமிழர் நலப் பேரியக்கம்” வழக்குத் தொடுத்து, மெட்ராஸ் கபே படத்தை இந்தியா முழுவதும் வெளியிடத் தடை கோரியது. அவசர வழக்காக எடுத்து விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.ஆகவே படம் தமிழகம் தவிர்த்து இந்தியா முழுவதும் வெளியானது.அதே ராஜபக்சே கும்பல் தான்“தி பேமிலி மேன்-2 “ வெப்சீரியல் எடுத்துள்ளது. இந்தத்தொடரில் மனோஜ்பாஜ்பாயி,சமந்தா, தேவதர்ஷினி சேத்தன், பிரியாமணி ,சரத்கெல்கர், ஸ்ரேயா தன்வந்தரி, ரவிந்திரா விஜய், சஷாப் அலி, ஆனந்சாமி, வேதாந்த் சின்ஹா, சரிப் ஆஷ்மி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.
இப்படியான வெப்சீரியல்கள் திரைப்படங்களின் மூலமாக இந்தியர்களின் பொதுப்புத்தியில் விடுதலைப் புலிகளும், அதன் தலைமையும் இந்தியாவுக்கு எதிரானது என்கிற எண்ணத்தையும்,புலிகள் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு என்கிற ஒரு எண்ணத்தையும் பதியவைக்கும் முயற்சியை ராஜபக்சே கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. இந்தத்தொடரின் வினியோகஸ்தராகத் தமிழ்ப்பட நடிகர் அருண்பாண்டியன் எனத் தகவல்கள் வருகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.தமிழ்மண்ணிலிருந்து கொண்டு, தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதை அருண்பாண்டியன் போன்ற தமிழர்கள்நி றுத்திக்கொள்ள வேண்டும்.அதே போல இனப்படுகொலை குற்றவாளிகளான ராஜபட்சே கும்பலின் அடிவருடிகளான வட இந்தியக் கைக்கூலிகள், தொடர்ந்து தமிழர்களையும், தமிழர் மண்ணையும், விடுதலைப்புலிகளையும்,கீழ்த்தரமாக விமர்சிப்பதை, நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையேல் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறோம்.
“சென்னையில் தீவிரவாதம்” என அந்தக்கதையின் முன்னோட்டத்தில் வருகிறது. இதன் மூலம் தமிழகத்தைக் காஷ்மீர் போலவும், புல்வாமா தாக்குதல் நாடகம் போன்றும் வன்முறை களமாகக் காட்டி, ஒரு பதட்டமான பகுதியாகக் கட்டமைக்க முயல்கிறார்கள்.அதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் அயோக்கியத்தனமான செயலாகும்.
பாராளுமன்றத்தில் திமுகவின் எம்பி டிஆர் பாலு அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்திக்கு உயர்மட்ட பாதுகாப்பு வேண்டும் என அரசிடம் வேண்டுகோள் வைத்துப் பேசுகிற போது, “விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து” என்றார்.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? “இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்” என்கிற கோரிக்கை தமிழகத்திலிருந்து கடுமையாகத் தொடர்ந்து எழுந்து கொண்டுள்ளது.இந்த கோரிக்கையை மடைமாற்றவே ராஜபட்சே கும்பல் முயல்கிறது. அதாவது, விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரித்து, சிங்களவர்களைப் புனிதப்படுத்தும் வேலையைச் செய்கிறது.ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பறிகொடுத்துவிட்டு, மீளாத்துயரில் இருக்கும் தமிழர்கள் இழிவுபடுத்து படுத்துவதின் ஊடாக, மனிதநேயமே இல்லாமல்வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்கள்.
ஆகவே, அமேசான் பிரேம் நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனம். அந்த நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்கிற அத்தனை நாடுகளிலும், உலகத்தமிழர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத் தலைவர்கள் ஒருங்கிணைந்து
இந்தத்தொடர் வெளிவராமல் தடைசெய்ய வழக்குத் தொடுத்தாக வேண்டும். அதே போல இந்தத்தொடர் இந்தியாவில் வெளிவராமல் தடைசெய்ய இந்திய அரசுக்கு, தமிழக அரசும்,தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசிய இயக்கங்களும்,தமிழின உணர்வாளர்களும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தமிழர் நலப் பேரியக்கம் வேண்டுகோள் வைக்கிறது.
- சோழன் மு.களஞ்சியம்
தலைவர்,தமிழர் நலப் பேரியக்கம்.