மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.இதனையடுத்து அந்நாட்டின் 800-க்கும் அதிகமான ஜனநாயக ஆதரவாளர்கள் ஜுண்டா எனப்படும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக முழுவதும் மியான்மர் நாட்டு ராணுவத்துக்கு கண்டனங்கள் குவிந்தன.போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல், போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கும் பொதுமக்கள் மீதும் ராணுவத்தை கட்டு அவிழ்த்து விடுவதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் மத்திய மியான்மரில் வாழும் மக்கள் எல்லையில் நோக்கி விரைந்துள்ளனர். ராணுவத்துக்கு எதிராக புரட்சி படைகள் அங்கு உருவாகி உள்ளன.அத்துமீறும் காவல்துறை மற்றும் ராணுவத்தை எதிர்க்க இந்த படையினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.
மியான்மர் – சீன எல்லைகளில் சமீபத்தில் புரட்சியாளர்களுக்கும், மியான்மர் பாதுகாப்பு துறையினருக்கு நடந்த போரில் பல பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.இந்த நிலையில் மியான்மரில் கிழக்கு பகுதியில் உள்ள மொபைய் என்ற இடத்தில் 13 போலீசாரை புரட்சிப்படை சுட்டுக்கொன்றது. அவர்கள் போலீஸ் நிலையங்களையும் கைப்பற்றினார்கள். அதோடு போலீசார் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.