கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதன் ஊடாக பாரம்பரிய கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி வழங்கியுள்ளார்.இதேவேளை கடற்றொழிலாளர்களது நலன்களை பாதிக்கும் எந்தவொரு விடயத்தையும் தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சூளுரைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அரியாலை பிரதேசத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அவர், கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்டு, கடலட்டை குஞ்சுகளின் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடினார்.அதனைத் தொடர்ந்து, கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க சகல சந்தர்ப்பங்களையும் பயன்படுத்துவதில் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடலட்டை வளர்ப்பு பண்ணைகளை பொருத்தமான இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.