சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி புதிய உருமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.இவ்வாறு ஆயிரக்கணக்கான உருமாற்றங்களை அடைந்துள்ளது. அவற்றில் 4 வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டதாக இருக்கிறது.இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரேசில் வைரஸ், இங்கிலாந்து வைரஸ், தென்ஆப்பிரிக்கா வைரஸ் என அவை பிரிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் வியட்நாம் நாட்டில் புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதாகவும், காற்றிலும் அது பரவக்கூடியது என்றும் வியட்நாம் மந்திரி நுயேன்தன்லாங் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ், இங்கிலாந்து வைரஸ் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருக்கிறது என்றும் மந்திரி கூறி இருக்கிறார்.வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்றிய நிலையில் அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்தது. அதை வைத்து ஆய்வு செய்த போது அது புதிய வகை வைரஸ் என்பது தெரியவந்தது.இதுபற்றி அவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அது புதிய வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டால் அதுபற்றிய அறிவிப்புகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிடும்.