இலங்கை கடலில் கசியும் எண்ணெய்!! பேராபத்தை வெளியிட்ட நாரா

இலங்கை கடலில் கசியும் எண்ணெய்!! பேராபத்தை வெளியிட்ட நாரா

கொழும்பு கடற்பரப்பில் டீசல் அல்லது மண்ணெண்ணெய் என்பன கலக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஆனாலும் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளான கடற்பரப்பை அண்மித்த பகுதியில், மசகு எண்ணெய் நீரில் கலக்கப்படவில்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த எண்ணெய்ப் படலம் 19 கடல் மைல் வரை பரவியிருந்த போதிலும், அது தற்போது 5 முதல் ஆறு மைல் வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாரா நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எண்ணெய் பரவுவதை மேலும் கட்டுப்படுத்த BOOM என்ற தொழிநுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும், காந்த சக்தியைக் கொண்டு எண்ணெயை அகற்றுவதற்கான சாத்தியப்பாடு இல்லை எனவும் அவ்வாறு மேற்கொள்வதின் ஊடாக கால வீண்விரம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

, எண்ணெய் படலங்கள் காணப்படுவதன் ஊடாக கடலுக்குள் சூரிய ஒளி பிரவேசிக்காது எனவும், இதனால் கடல் வாழ் உயிரிழனங்கள் இறக்கக் கூடும் எனவும் நாரா நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எண்ணெய்கள் மணற்பாறைகளில் படியும் பட்சத்தில், குறித்த பாறைகள் வலுவை இழப்பதின் ஊடாக, மண்ணரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும். நாரா நிறுவனத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *