சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின் முகக்கவசத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவளைத்தளத்தில் வைரலானது.
அதில் அவர் அணிந்திருந்த முகக்கவசம் ஹை-டெக் தொழில்நுட்பம் கொண்டுள்ளது என நெட்டிசன்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த புதுவகை மாஸ்க் எந்த மாதிரியான மாஸ்க் இது? என்ன விலை? வித்தியாசமாக இருக்கிறது என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. என்பது போல் பேச்சு கிளம்பியது.
இந்த மாஸ்க் எல்ஜி நிறுவனம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. எல்ஜி நிறுவன தயாரிப்பாக கருதப்படும் இந்த முகக்கவசத்தின் இரு புறங்களிலும் காற்று சுத்திகரிப்பான்கள் இருக்கும்.
இந்த சுத்திகரிப்பான்கள் காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டதால் இடையூரின்றி பல மணி நேரம் அணிந்துகொள்ள முடியும் என கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி இப்படிப்பட்ட ஹை-டெக் தொழில்நுட்பங்களை கொண்ட இந்த முகக்கவசத்தின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 249க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவதால் இந்திய ரூபாய் மதிப்பில் இந்த முகக்கவசத்தின் விலை சுமார் 18 ஆயிரமாக கூறப்படுகிறது.
மேலும் இதில் பல்வேறு பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அவை,
- முகக்கவசத்தில் பொருந்தப்பட்டிருக்கும் சென்சார், அணிந்திருப்போரின் சுவாச சுழற்சிக்கு ஏற்ப அளவைமாற்றி கொள்ளும்.
- .மாஸ்க் அணிந்திருக்கும் போது கிருமிகள் நம்மை நெருங்காத வண்ணம் காத்துக்கொள்ள UV-LED ஒளி பொருத்தப்பட்டிருக்கிறது.
- இந்த முகக்கவசமானது, அதனை அணிவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்க உதவுகிறது. எனவே, மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படாத வண்ணம் இந்த முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- முகக்கவசத்தில் ஒவ்வொரு கூறுகளும் மாற்றத்தக்கவை என்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை.
- 820 mAh பேட்டரி திறனுடைய இந்த மாஸ்க்கை 2 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்த-சக்தி பயன்பாட்டில் (Low-power mode) 8 மணிநேர நீடிக்கும்.
- அதிக-சக்தி பயன்பாட்டில் (High-power mode) 4 மணி நேரம் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- 30 நாட்கள் பயன்பாட்டிற்கு பிறகு முகக்கவசத்தில் உள்ள ஃபில்டர்களை மட்டும் மாற்ற வேண்டியது அவசியம்.