இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிம் பிரெஸ்னன் தனக்கு கொலை மிரட்டல் வந்தது குறித்து முதன் முறையாக பேசியுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். இவர் இந்த போட்டியில் 90 ஓட்டங்களை கடந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
இதில் மட்டும் அவர் சதமடித்தால் 100 சதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சச்சின் படைப்பார் என்பதால், ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களின் பிரார்த்தனையாக இந்த சதம் இருந்தது.
ஆனால், சச்சின் 91 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன் அவரை எல்.பி.டபில்யூ மூலம் அவுட்டாக்கினார். இதனால் சச்சினின் இந்த வரலாற்று சாதனை தள்ளிப் போனது.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து இப்போது தனியார் ஊடகம் ஒன்றிற்கு டிம் பிரெஸ்னன் அளித்துள்ள பேட்டியில், அன்றைய போட்டியில் சச்ச்னினை எல்.பி.டபில்யூ முறையில் அவுட்டாக்கினேன்.
ஆனால், அந்த பந்தானது அவரது பேட்டில் பட்டு கால்காப்பில் பட்டது அப்படியே தெரிந்தது. நடுவரும் தவறான தீர்ப்பை கொடுத்துவிட்டார்.
இதனால் அன்றைய தினம் போட்டி முடிந்து திரும்பிய பிறகு எனக்கும் மற்றும் அவுட் கொடுத்த நடுவருக்கும் கொலை மிரட்டல் வந்தது. இப்படி, நடுவருக்கும் எனக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததால் நாங்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் என கூறியுள்ளார்