கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸானது டெல்டா கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு எதிராக 61 வீதம் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இந்திய கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் மருத்துவர் என்.எஸ்.கே. அரோரா தெரிவித்தார்.