எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து பட்டப்பகலில் திருடுகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதனை எதிர்த்து எரிபொருள் தொடர்பான அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவேளை காணப்பட்டதை விட தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்தவேளை எரிபொருள் விலைகள் குறைவாகவே காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் சூத்திரத்தை பின்பற்றியிருந்தால் 2020 இல் எரிபொருள் விலைகள் குறைந்தவேளை மக்கள் நன்மையடைந்திருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிபொருள் சூத்திரத்தை அரசாங்கம் கைவிட்டதால் பொதுமக்கள் மீது அரசாங்கம் சுமைகளை சுமத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.