ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றையதினம் நாட்டுமக்களுக்காக ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் குறித்து எதுவுமே இல்லை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தனது மற்றும் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பில் 250 இற்கு மேட்பட்ட உருத்திரபுரம் மற்றும் ஊற்றுப்புலம் பகுதி மக்களுக்கான உலருணவுப்பொருட்களை இன்று (26) வழங்கி வைத்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், நாங்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். நாடு நிறைய கடனுக்குள் இருக்கிறது. இந்தப் பிரச்சனை பற்றி உரையில் இல்லை. குறிப்பாக தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் அவரின் உரையில் எதுவுமில்லை. போட் சிற்றி, சீன பிரச்சனை பற்றி வாய் திறக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கில் பெளத்த சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சொல்லியிருக்கிறார். அதனால் தான் வடக்கு, கிழக்கில் பிரச்சினைகள் உருவாகி வருகிறது எனக் கூறினார்.