வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் – அசேல சம்பத்

வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் – அசேல சம்பத்

வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன், நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என சிஐடியினரால் வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்ட பின்னர் விடுதலையான சிவில் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர்இந்ம விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துது் தெரிவிக்கையில், 

வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன், நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன். வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச்சென்றார்கள். எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன நான் வீட்டியே இருந்தேன், நான் இந்த நாட்டின் பிரஜை. அதிகாரிகள் சீருடையின் உரிய காரணம் இன்றி என்னை இழுத்துச் சென்றனர்.

பத்துபேருக்கு மேல் வந்திருந்தனர், எனது கையில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள், எனது விரலில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள், இந்த சாரத்துடன் தான் என்னை கொழும்பிற்கு அழைத்துச் சென்றார்கள். ரிஷாட் பதியுதீன் எனக்கு இந்த ரீசேர்ட்டை தந்தார், பொடி லசி எனக்கு குளிப்பதற்கான சவர்க்காரத்தை தந்தார், சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *