பேஸ்புக்கில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இதில் பல பாதுக்காப்பு அம்சம்ங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் friend list இல்லாத யாராலும்உங்கள் Profileலை முழுமையாக பார்க்க முடியாதப்படி லாக் செய்ய முடியும்.
தற்போது இதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
வழிமுறை
- முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக உங்களது பேஸ்புக் ஆப்பை அப்டேட்செய்யவும்.
- அடுத்து உங்கள் பேஸ்புக் தளத்தில் உள்ள profile பக்கத்திற்கு செல்லவும்.
- அதன்பின்பு profileலில் இருக்கும் More என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அடுத்து மெனுவிலிருந்து லாக் ப்ரொபைல் விருப்பத்தைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தவுடன் உங்களது ஸ்க்ரீனில் profile லாக் செய்யப்படலாமா என்கிற கன்பிர்மேஷன் மெசேஜை பெறுவீர்கள்.
- இப்போது profile லை லாக் செய்ய Lock Your Profile என்பதை கிளிக் செய்யவும்.
- பேஸ்புக் profile லாக் செய்யப்பட்டு இருந்தால், உங்களது Friend list இல்லாத யாராலும்உங்கள் profileலை முழுமையாக பார்க்க முடியாது. அவ்வளவு ஏன் உங்களின் ப்ரொபைல் பிக்சரை கூட பெரிதுபடுத்தி பார்க்க முடியாது.