முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடிகுண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடிகுண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறன. அந்தவகையில் நேற்றுமுன் தினம் (28) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் லதனி சிறுவர் இல்லத்துக்கு அருகில் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு முல்லைத்தீவு நகர் பகுதியில் சுனாமி நினைவாலயம் அருகிலும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டன.

இதேவேளை நேற்று முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடிபொருடக்ள் சில மீட்கப்பட்டுள்ளன. இரண்டு குண்டுகள், ஒரு கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

போரின் போது பாவிக்கப்பட்ட குறித்த வெடிபொருட்கள் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் கடற்படையிரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ளன.குறித்து வெடிபொருட்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களை தகர்த்து அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *