சீன இராணுவத்தின் சீருடையில் பணியாளர்கள்- சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ள பாதுகாப்பு செயலாளர்

சீன இராணுவத்தின் சீருடையில் பணியாளர்கள்- சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ள பாதுகாப்பு செயலாளர்

திஸ்ஸ மஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள் அந்நாட்டு இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்க பதிலளித்துள்ள சீனத்தூதரகம், பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று விளக்கமளித்துள்ளது.

மேலும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் சீனத்தூதரகத்திடம் கோரியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *