பிரான்சில் நாளை முதல் கொரோனா ஊரடங்கு தளர்வுகள்! எதற்கு எல்லாம் அனுமதி

பிரான்சில் நாளை முதல் கொரோனா ஊரடங்கு தளர்வுகள்! எதற்கு எல்லாம் அனுமதி

பிரான்சில் நாளை கொரோனா ஊரடங்கிற்கான உள்ளிருப்பு இறுதிக்கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், எதற்கு எல்லாம் அனுமதி பற்றி பார்ப்போம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டது. முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, வீட்டில் இருப்பதே அதிகம் நல்லது என பல கட்டுப்பாடுகாள் விதிக்கப்பட்டது.

தற்போது தடுப்பூசி வருகை காரணமாக, பிரான்சில் கொரோனா பரவல் முன்பு போல் இல்லாமல் குறைந்துள்ளது. இதனால், இங்கு கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 30-ஆம் திகதி முதல் முடிவுக்கு வருகிறது. அதாவது உள்ளிருப்பு இறுதிகட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வருகிறது. அதன் படி எது எதுக்கெல்லாம் அனுமதி என்பது பற்றி பார்ப்போம்.

* அனைத்து உணவகங்கள், மதுச்சாலை, அருந்தகங்களும் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்படும். * திரையரங்கம், இசைக்கூடங்கள், நாடக அரங்குகள் போன்றன முற்றாக திறக்கப்படும்.

* விளையாட்டு கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் முற்றாக திறக்கப்படும். * வர்த்தக கண்காட்சிகள், கேளிக்கை நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்படும்.

* உட்புற இசை நிகழ்ச்சிகள்.

* படகு பயணங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது.

* திருமணங்கள், மத விழாக்கள் போன்றவற்றுக்கு அனுமதி.

* இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.

மேலும், இரவு விடுதிகள், டிஸ்கோ போன்றவற்றிக்கு அடுத்த மாதம் 9 திகதி முதல் அனுமதிக்கப்படும். அதோடு, அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *