வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் – வியூகம் வகுக்கும் பொதுஜன பெரமுன

வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் – வியூகம் வகுக்கும் பொதுஜன பெரமுன

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரச மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் என்றும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், முறைப்படி வருகின்ற ஜனவரி மாதத்திலேயே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்றுப் பரவலை 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, மக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து, அதனூடாக மக்களின் மனங்களை வென்றெடுக்கவும், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் பல நிவாரணங்களை அறிவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அதனூடாக தேர்தல் வெற்றியைப் பதிவுசெய்ய வாய்ப்பிருப்பதாக அரச உயர்மட்டத்திற்கு ஆலோசனையும் கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பஷில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் ஊடாக இந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *