2021ஆம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 4,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைப்பெற்றதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் முதித விதனபதிரண தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஆறு மாதங்களில் சுமார் 48,000 தொலைபேசி அழைப்புகளிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். எனினும் கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8,165 ஆக உள்ளது.
இதேவேளை, உங்கள் பிள்ளைகளின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 1929 க்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.
மேலும், 6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு ‘குழந்தை சட்டம்’ தொடர்பில் கூடுதல் அறிவு வழங்க மூன்று புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.