கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள சீன கலாசார மையம் தயாரித்த ‘THE PEARL OF THE SILK ROUTE’ புத்தகம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் வைத்து கடந்த 6 ஆம் திகதி வழங்கப்பட்டது. இலங்கையின் சீன கலாசார மையத்தின் பணிப்பாளர் லிவன் யூ, புத்தகத்தின் மூலப்பிரதியை பிரதமருக்கு வழங்கினார்.
இந்த புத்தகம் கடந்த 6 ஆண்டுகளில் சீன கலாசார மையத்தால் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகும்.தெற்காசியாவின் முதல் சீன கலாசார மையம், செப்ரெம்பர் 16, 2014 அன்று இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவின் பேரில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் பணிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வரும் லிவின் யூ, தனது பதவிக் காலத்தின் முடிவில் தனது நாட்டிற்கு திரும்புவார் என்று கூறினார்.