கிட்னியை விற்க முயன்று ஏமாந்த தம்பதி!

கிட்னியை விற்க முயன்று ஏமாந்த தம்பதி!

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், கிட்னி விற்கும் மோசடி கும்பலிடம் சிக்கிய தம்பதி 40 லட்ச ரூபாயை பறிகொடுத்து ஏமாந்துபோன அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் மற்றும் லாவண்யா தம்பதியினர். இவர்கள் கரதாபாத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை வைத்திருக்கிறார்கள்.

இந்த தம்பதிகள் சமீபத்தில் நான்கு மாடியில் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தனர். ஆனால் அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில், இந்த ஊரடங்கு காரணமாக கடனை கட்ட முடியவில்லை.

இதனால் அவர்கள் ஓன்லைனில் தங்களின் கிட்னியை விற்க முடிவு செய்தனர்.

அதன் பிறகு அதற்கான தேடல்களை இணையத்தில் தேடியபோது இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பிரபல மருத்துவமனை ஊழியர் என்று கூறிக்கொண்டு ஒருவர் அவர்களை தொடர்பு கொண்டார். அந்த நபர்கள் அவர்களின் கிட்ணிக்கு ரூ. 5 கோடி தருவதாக பேரம் பேசி முடித்தனர்.

அதன் பிறகு அவர்கள் பதிவு கட்டணம், செயலாக்க கட்டணம், நாணய பரிமாற்ற கட்டணம், விசா கட்டணம் மற்றும் காப்பீடு ஆகியவற்றின் ஒரு பகுதியாக பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ. 26 லட்சம் டெபாசிட் செய்யுமாறு கோரி, அவர்களிடமிருந்து அந்த பணத்தையும் பெற்றனர்.

பின்னர், பெங்களூருவில் அந்த இங்கிலாந்து கூட்டத்தினை சேர்ந்த ஒருவர் அவர்களை தொடர்புகொண்டு கள்ள நோட்டுகளை தயாரிக்கும் வித்தையை கத்து கொடுத்து விட்டு 14 லட்சம் ரூபாய் நல்ல நோட்டுகளை வாங்கிச்சென்று விட்டார்கள்.

அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் பொலிஸில் புகார் கொடுத்தனர். பொலிஸார் வழக்கு பதிந்து அந்த மோசடி கூட்டத்தை தேடி வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *