ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு ஜேர்மனியில் புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஜெர்மனியின் அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த திடீர் வெள்ளத்தால் வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை வெள்ள பாதிப்பால் 160 பேர் பலியாகியுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனி அரசு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், Bonn நகரத்துக்கு அருகிலுள்ள Euskirchen பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை ஒன்றில் விரிசல்கள் ஏற்படத் துவங்கியுள்ளதையடுத்து, அப்பகுதியில் வாழும் 4,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அந்த அணை எப்போது உடையுமோ என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடவுளை வேண்டிக்கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.