உலகின் மிகப்பெரிய கோளரங்கமான வானியல் அருங்காட்சியகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை (17) உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
ஏறக்குறைய 58,600 சதுர மீற்றர் பரப்பளவில் நவீன தொழில்நுட்பத்துடன் புதுமையான கட்டட கலையமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
வானியல் தொடர்பான பல்வேறு கருப்பொருள்கள் கொண்ட கண்காட்சி பகுதிகள், கோல் மண்டல அமைப்பு, வானியல் ஆராய்ச்சி கருவிகள், வானியல் வரலாறு நூல்கள் எனப் பல நவீன தொழில்நுட்ப தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கோல்கள் லேசர் தொழில்நுட்பம் மூலம் அமைக்கப்பட்டுள்ளன.